இந்தியா, ஏப்ரல் 3 -- ஒருபுறம் தியேட்டர்களில் பெரும் ஆரவாரத்துடன் படங்கள் வெளியாகிக்கொண்டிருக்கும் வேளையில் ஓடிடியில் ரிலீசாகும் படங்களின் எண்ணிக்கையும் அதிகரித்த வண்ணம் உள்ளது. அந்த வகையில், ஏப்ரல் மாதத்தின் முதல் வாரத்தில் (ஏப்ரல் 04) நயன்தாராவின் டெஸ்ட் முதல் லெக் பீஸ் வரை ஓடிடியில் என்னென்ன திரைப்படங்கள் வெளியாக உள்ளது என்பது குறித்த சுவாரஸ்ய தகவலை இந்த தொகுப்பில் காணலாம். இதில் எந்தெந்த திரைப்படங்கள் ரசிகர்களின் வரவேற்பை பெறும் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

ஒய் நாட் நிறுவனம் மூலம் 'விக்ரம் வேதா', 'இறுதி சுற்று', 'ஜகமே தந்திரம்' உள்ளிட்ட படங்களை தயாரித்த சசிகாந்த், 'டெஸ்ட்' படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார். மாதவன், நயன்தாரா, சித்தார்த், மீரா ஜாஸ்மின் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். கிரிக்கெ...