இந்தியா, மார்ச் 6 -- OTT: நடிகர் மாதவன், நயன்தாரா, சித்தார்த் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம், டெஸ்ட். இந்தப் படம் ஓடிடியில் நேரடியாக வெளியாகவுள்ளது.

ஸ்போர்ட்ஸ் டிராமா திரில்லர் படமான டெஸ்ட் திரைப்படம், வரும் ஏப்ரல் 4-ம் தேதி முதல் நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது.

நெட்ஃபிளிக்ஸ் 'டெஸ்ட்' திரைப்படத்தின் ஓடிடி வெளியீட்டுத் தேதியின் போஸ்டரை ரசிகர்களுடன் பகிர்ந்துள்ளது. இதில் மாதவன், சித்தார்த், நயன்தாரா ஆகியோர் சீரியஸான தோற்றத்தில் காணப்படுகிறார்கள். இந்தப் போஸ்டரில் கிரிக்கெட் பேட் மற்றும் பந்தும் இருப்பதால், இது ஒரு சீரியஸான கிரிக்கெட் படம் என்பது தெரிகிறது.

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய ஐந்து மொழிகளில் 'டெஸ்ட்' என்னும் இப்படம் நெட்பிளிக்ஸில் வெளியாகவுள்ளது. கிரிக்கெட் பின்னணியில் உருவாகும் இப்படத்தை எஸ்.சசி...