இந்தியா, பிப்ரவரி 26 -- Vertical OTT Series: ஆஹா தமிழ் ஓடிடி, அப்சரா என்னும் இந்தியாவின் முதல் வெர்ட்டிக்கல் ஓடிடி ஃபேண்டஸி வலைத்தொடரை விரைவில் வெளியிடுகிறது. இதுகுறித்தான அறிவிப்பும் வெளியாகியிருக்கிறது.

நாட்டின் முன்னணி பிராந்திய ஓடிடி ஸ்ட்ரீமிங் தளமான ஆஹா தமிழ், அதன் சமீபத்திய படைப்பான அப்சரா என்னும் புதிய வலைத்தொடருடன் புதிய களத்தை எட்ட இருக்கிறது.

கற்பனை வகையிலான இந்தியாவின் முதல் வெர்ட்டிகள் வலைத் தொடர் இதுவாகும். இன்றைய மொபைல் பார்வையாளர்களுக்காக வடிவமைக்கப்பட்ட அப்சரா வலைத்தொடர், இதற்கு முன் எப்போதும் இல்லாத அளவுக்கு ஒரு ஆழமான மற்றும் தனிப்பயனாக்கப்பட்ட பார்வை அனுபவத்தை உறுதியளிக்கிறது.

அதிநவீன கதைசொல்லல் மற்றும் புதுமைகளை இணைத்து, அற்புதமான காட்சியமைப்புகள் மற்றும் வெர்டிகள் பார்வைக்கு(Vertical viewing) உகந்ததாக ஒரு கவர்ச்சிகர...