இந்தியா, பிப்ரவரி 18 -- பன்னீர்செல்வத்தின் மீது நம்பிக்கையை குறைபாட்டில் தான் அம்மா இருந்தார். அதை என்னிடமே தெரிவித்தார் என முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்து உள்ளார்.

முன்னாள் அமைச்சரும், எதிர்க்கட்சித் துணைத் தலைவருமான ஆர்.பி.உதயகுமார் வீடியோ ஒன்றை வெளியிட்டு உள்ளார். அதில், ஓபிஎஸ்க்கு நான் நினைவுபடுத்த கடமைப்பட்டிருக்கிறேன். ஏன் என்று சொன்னால், அவர் சொல்வதெல்லாம் உண்மை என்று மக்களிடத்திலே அந்த செய்தி சென்று விடக்கூடாது. அம்மா அவர்கள் எனக்கு நற்சான்று கொடுத்தார் என்று அடிக்கடி தனக்குத்தானே தம்பட்டம் அடித்துக் கொள்கிறார் .

அம்மா அவர்கள் நம்மோடு இருந்த போது, இதே தேனி மாவட்டத்தில் இவர்தான் அதிகாரம் மையம் என்று சொல்லிக் கொண்டிருந்தபோது, 2010 ஆம் ஆண்டு முல்லைப் பெரியாறு உரிமை போராட்டத்திற்கு இவரை தள்ளி வைத்துவிட்டு அம்மா அவர்கள்...