இந்தியா, பிப்ரவரி 18 -- முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் ஒரு கொசு என அதிமுக முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் விமர்சனம் செய்து உள்ளார்.

சிந்தனை சிற்பி சிங்காரவேலரின் பிறந்தநாளையொட்டி சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள அவரது சிலைக்கு அதிமுக முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் மாலை அணிவித்து மரியாதை செய்தார்.

இந்தியாவிலேயே மே தினத்தை கொண்டாடியவர் தோழர் சிந்தனை சிற்பி சிங்காரவேலர்தான். முற்போக்கு சிந்தனைகளை தமிழ் மக்களுக்கு அவர் கொண்டு சென்றார். அவருடைய அருமை, பெருமைகளை உணர்ந்து அதிமுக ஆட்சியில் ராயபுரத்தில் மணிமண்டபம் அமைத்து, ஈபிஎஸ் ஆட்சியில் அரசு விழா அறிவிக்கப்பட்டது.

மேலும் படிக்க: OPS vs RB Udhayakumar: 'தனக்குதானே தம்பட்டம் அடிக்கும் OPS! ஜெயலலிதா சொன்னது என்ன தெரியுமா?' விளாசும் ஆர்.பி.உதயகுமார்!

கொசுக்களை பற்றி பேச ...