இந்தியா, பிப்ரவரி 12 -- தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும் மீண்டும் தர்மமே வெல்லும் என அதிமுக உட்கட்சி விவகாரம் தொடர்பாக உயர்நீதிமன்ற தீர்ப்பு குறித்து ஓ.பி.எஸ். கருத்து தெரிவித்துள்ளார்.

அதிமுக உட்கட்சி விவகாரம் தொடர்பாக தேர்தல் ஆணையம் விசாரணை நடத்த தடை விதிக்கக்கோரி எடப்பாடி பழனிச்சாமி தொடர்ந்த வழக்கை எதிர்த்து ஓ.பி.ரவீந்திரநாத், புகழேந்தி ஆகியோர் தொடர்ந்து வழக்கில் இன்று சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. அதில் அதிமுக உட்கட்சி விவகாரத்தை தேர்தல் ஆணையம் விசாரணை நடத்தலாம் என தீர்ப்பளிக்கப்பட்டது.

இது தொடர்பாக தேனி மாவட்டம் பெரியகுளத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த ஓபிஎஸ், "நீதிமன்றத்திற்கு இணையானது தேர்தல் ஆணையம். அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளில் ஏற்படும் பிரச்சனைகள் குறித்து விசாரணை நடத்த இந்திய தேர்தல் ஆணையத்திற்கு அதி...