இந்தியா, ஏப்ரல் 10 -- பண தேவையில் இருப்பவர்களை கடன் என்ற வலையில் சிக்க வைத்து, இறையாக்கும் ஆன்லைன் லோன், டிஜிட்டல் லோன் நிறுவனங்களின் பிடியில் மும்பை சேர்ந்த பியூட்டிசியன் பெண் ஒருவர் சிக்கியுள்ளார். கடனாக பெற்ற அந்த பெண்ணின் நிர்வான புகைப்படங்களை மார்பிங் செய்து இணையத்தில் பகிர்ந்திருக்கும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Everloan என்ற செயலி மூலம் பாதிக்கப்பட்ட பெண் ரூ. 10 ஆயிரம் கடனாக பெற்றதாக கூறப்படுகிறது. இதையடுத்து சமூக வலைத்தளத்தில் பிரவுசிங் செய்தபோது தனது நிர்வாண புகைப்படம் இருப்பதை கண்டு அவர் அதிர்ச்சி அடைந்துள்ளார்.

பணத்தேவை உள்ளவர்களுக்கு கடனாக அளிக்கும் லோன் செயலிகள், தங்களிடம் அணுகுபவர்களின் புகைப்படம், இதர ஆவணங்கள், டிஜிட்டல் மற்றும் மொபைல் அணுகலை வழங்க சம்மதம் பெறுகின்றன. அத்துடன் அவர்கள் வாங்கும் கடனை வட்டியுடன் கட...