இந்தியா, பிப்ரவரி 7 -- இந்த ஆண்டில் தமிழில் வெளியாகும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தும் வெப் சீரிஸாக ஆபிஸ் என்ற தொடர் அமைந்துள்ளது. டிஸ்னி ப்ளஸ் ஹாட் ஸ்டாரில் ஸ்டிரீமிங் ஆக இருக்கும் இந்த சீரிஸின் புதிய புரொமோ வெளியிடப்பட்டுள்ளது

கடந்த 2013 முதல் 2015 வரை விஜய் டிவியில் ஒளிபரப்பான ஆபிஸ் என்ற தொடர் புத்தம் புது பொலிவுடன் மறு உருவாக்கம் செய்யப்பட்டு அதே டைட்டிலில் வெப் சீரிஸாக வெளியாகிறது.

கிராமத்தில் இருந்து பெண் ஒருவர் வாக்காளர் அடையாள அட்டையைப் பெற தாசில்தார் அலுவலகம் வருகிறார், அங்கு அவர் தனது கணவரின் பெயரைக் கூற மறுக்கிறார். இப்படியான சூழலில் அந்த பெண்ணின் கணவர் பெயரை கண்டறிய மொத்த ஆபிஸும் அள்ளாடுகிறது. இப்படியான காட்சிகளுடன் சிரிப்பு பட்டாசாக ஆபிஸ் சீரிஸ் புரொமோ அமைந்துள்ளது.

சுவாரஸ்யம் மிக்க நகைச்சுவை திரைக்கதையுடன் உருவாகியிருக்க...