இந்தியா, பிப்ரவரி 18 -- கடந்த பல ஆண்டுகளுக்கு முன்னர் மனிதர்களின் ஆயுட்காலம் மிகவும் குறைவாகவே இருந்தது. மருத்துவ துறையின் அதிவேக வளர்ச்சியாலும், அறிவியலின் புதுவிதமான கண்டுபிடிப்புகளாலும் மனிதர்களின் ஆயுட்காலம் அதிகரித்து விட்டது எனவே கூறலாம். ஆனால் அதிவேக வளர்ச்சியினால் நமது உடல் ஆரோக்கியத்தில் பிரச்சனைகளும் அதிகரித்து வருகின்றன. அதில் முக்கியமான ஒன்று தான் குழந்தைகளில் பரவலாக காணப்படும் உடல் பருமன். ஏறத்தாழ 20 ஆண்டுகளுக்கு முன் இருந்த குழந்தைகளை காட்டிலும் தற்போது உள்ள குழந்தைகளில் உடல் பருமன் கணிசமாக உயர்ந்துள்ளது என உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.

இது குறித்து உலக சுகாதார நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில், "2022 ஆம் ஆண்டில், 5 வயதுக்குட்பட்ட 37 மில்லியன் குழந்தைகள் அதிக எடையுடன் இருந்ததாக கூறப்பட்டுள்ளது. இது ஒரு காலத்தில் அதிக வ...