இந்தியா, ஜனவரி 29 -- சில ஆரோக்கியமான பழக்கங்களை குழந்தைகளிடம் புகுத்துவதன் மூலம், அவர்கள் ஆரோக்கியமாக இருப்பதற்கான வலுவான அடித்தளத்தை வளர்த்துக் கொள்ள உதவும். அத்துடன் மிக முக்கியமாக சிறு வயதிலேயே உடல் பருமன் ஏற்படும் அபாயத்தை குறைக்கும் என நம்பப்படுகிறது.

குழந்தை பருவத்தில் உடல் பருமன் அதிகரிப்பு என்பது குறிப்பாக கோவிட் 19 தொற்றுநோய்க்குப் பிறகு, ஒரு குறிப்பிடத்தக்க சுகாதாரப் பிரச்னையாக உருவெடுத்துள்ளது. ஊரடங்குகளின் போது நீண்ட நேரம் செயலற்ற நிலையில் இருப்பது மற்றும் டிஜிட்டல் திரை செயல்பாடுகளை நம்பி இருப்பது குழந்தைகள் உடல் பருமன் அதிகரிக்கும் அபாயத்தை ஏற்படுத்தியுள்ளது.

உடல் எடை அதிகரித்த குழந்தைகள் உடல்நலக் கோளாறுகளை அனுபவிப்பது மட்டுமல்லாமல், சங்கடம் மற்றும் பிற சமூக அசௌகரியங்களையும் எதிர்கொள்கின்றனர்.

எனவே இதை தடுக்க பொறுப்பான பெ...