இந்தியா, ஜனவரி 30 -- ஒவ்வொரு நாளும் குழந்தைகளுக்கு பிடித்த உணவுகளை செய்து தர வேண்டும். ஆனால் குழந்தைகள் எப்போதும் பல சத்துக்களை கொண்ட உணவுகளால் அதிகம் ஈர்க்கப்படுவதில்லை. அதற்கு பதிலாக வண்ணமயமான உணவுகள் மீதும், இனிப்பு நிறைந்த உணவுகள் மீதும் அதிக பிரியம் கொண்டவர்களாக இருக்கின்றனர். இத்தகைய உணவுகள் அவர்களது உடலின் ஆரோக்கியத்தை கெடுக்கிறது. எனவே குழந்தைகள் விரும்பும் உணவுகளை நாமே சுகதாரமாகவும், சத்தான பொருட்களை கொண்டும் செய்து தர வேண்டும். இது சற்று கடினமான காரியம் தான். ஆனால் அதற்கும் சில வழிகள் உண்டு. குழந்தைகள் விரும்பும் பண்டங்களில் முக்கியமான இடம் கேக்கிற்கு உண்டு. இனிப்பான கேக் என்றால் எந்த குழந்தைக்கு தான் பிடிக்காது. பெரும்பாலான குழந்தைகள் கேக் என்றால் மிகவும் விரும்புவர். இந்த கேக்கை சத்து மாவை வைத்து அசத்தலாக செய்ய முடியும். இதனை ...