இந்தியா, பிப்ரவரி 11 -- வைட்டமின்கள் மற்றும் மினரல்கள்தான் உங்கள் உடலில் உள்ள நோய் எதிர்ப்பு சக்தி வலுவடையத் தேவையான ஊட்டச்சத்துக்கள் ஆகும். மற்றவை உங்களின் நோய் எதிர்ப்பு மண்டலம் மேம்பட உதவுகின்றன. இந்த செல்கள், திசுக்கம் மற்றும் உறுப்புகள் உங்களின் உடலை அச்சுறுத்தும் கிருமிகளான பாக்டீரியாக்கள், வைரஸ்கள் மற்றும் நச்சுக்களிடம் இருந்து காக்கிறது. இந்த ஊட்டச்சத்துக்கள் உங்களின் நோய் எதிர்ப்பாற்றலை பல்வேறு வழிகளில் மேம்படுத்துகின்றன. நோய் எதிர்ப்பு செல்களின் வளர்ச்சி மற்றும் இயக்கத்துக்கு உதவுவது, நோய் எதிர்ப்பை முறைப்படுத்துவது, ஆன்டிஆக்ஸிடன்ட் பாதுகாப்பு வழங்குவது என இவை உங்கள் உடலுக்குத் தேவையானவற்றைச் செய்கிறது. எனவே இந்த ஊட்டச்சத்துக்களை நீங்கள் போதிய அளவு சாப்பிடவேண்டும் என்று நிபுணர்கள் அறிவுறுத்துகிறார்கள். அப்போதுதான் உங்கள் உடலில் ...