இந்தியா, ஏப்ரல் 10 -- Numerology: ஜோதிட சாஸ்திரம் போலவே எண் கணிதமும் ஒருவரின் ஆளுமை மற்றும் எதிர்காலத்தை தெரிந்து கொள்ளக்கூடிய சாஸ்திரமாக திகழ்ந்த வருகின்றது. பல்லாயிரம் ஆண்டுகளாக எண் கணிதம் ஜோதிட முறை போல் பின்பற்றப்பட்டு வருகிறது. எண் கணிதத்தின் படி ஒருவர் பிறந்த தேதியை வைத்து அவர்களைப் பற்றி நாம் தெரிந்து கொள்ள முடியும் என கூறப்படுகிறது.

அந்த வகையில் என் கணிதத்தின் படி சில தேதிகளில் பிறந்த பெண்கள் தன்னம்பிக்கை மற்றும் தைரியம் உள்ளிட்டவைகளில் உச்சகட்டத்தில் இருப்பார்கள். மகிழ்ச்சியான வாழ்க்கைக்கு எது தேவையோ அது குறித்து அவர்கள் அறிந்து வைத்திருப்பார்கள் என கூறப்படுகிறது.

குறிப்பிட்ட சில தேதிகளில் பிறந்த பெண்களை யாராலும் ஜெயிக்க முடியாத அளவிற்கு இருப்பார்கள். அவர்கள் வெற்றி மற்றும் முன்னேற்றத்தை யாராலும் தடுக்க முடியாது என கூறப்படுகிறத...