இந்தியா, பிப்ரவரி 2 -- ஈரோட்டில் பெரியார் குறித்த துண்டு பிரசுரங்களை விநியோகித்த விவகாரத்தில் நாம் தமிழர் கட்சி - தந்தை பெரியார் திராவிடர் கழகம் இடையே ஏற்பட்ட மோதலால் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.

ஈரோடு கிழக்குத் தொகுதி எம்.எல்.ஏவாக இருந்த ஈவிகேஎஸ் இளங்கோவன் மறைவு காரணமாக வரும் பிப்ரவரி 5ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இத்தேர்தலை பிரதான எதிர்க்கட்சிகளான அதிமுக, பாஜக, தேமுதிக உள்ளிட்ட கட்சிகள் புறக்கணித்து உள்ளன. திமுக சார்பில் வி.சி.சந்திரகுமார் மற்றும் நாம் தமிழர் கட்சி சார்பில் சீதாலட்சுமி மற்றும் சுயேச்சை வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.

தந்தை பெரியார் குறித்து நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசிய கருத்துக்கு பெரியார் இயக்கங்கள் கடும் கண்டனத்தை தெரிவித்து வருகின்றன. ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் பரப்புரையில் பேசிய சீமான் 'பெ...