இந்தியா, பிப்ரவரி 16 -- Nivin Pauly: மலையாள சினிமா நட்சத்திரம் நிவின் பாலி இன்று ஞாயிற்றுக்கிழமை "இந்தியாவின் முதல் மல்டிவெர்ஸ் சூப்பர் ஹீரோ திரைப்படத்தில்" தான் நடிப்பதாகவும் அந்தப் படத்தின் பெயர் 'மல்டிவெர்ஸ் மன்மதன்' எனப் பெயரிட்டிருப்பதாகவும் அறிவித்து படத்தின் போஸ்டரை வெளியிட்டுள்ளார். இந்தப் படத்தை 2023 ஆம் ஆண்டு வெளியான 'என்கிலும் சந்திரிகே' மற்றும் 2019 ஆம் ஆண்டு வெளியான 'ஆவரேஜ் அம்பிலி' என்ற மினி தொடர் ஆகியவற்றை இயக்கிய அதித்யன் சந்திரசேகர் இயக்குகிறார்.

அனந்து மற்றும் நித்திராஜ் இணைந்து 'மல்டிவெர்ஸ் மன்மதன்' படத்தின் கதையை எழுதியுள்ளனர். நிவின் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் படத்தின் போஸ்டரை பகிர்ந்து இவ்வாறு அறிவித்தார். "இது எனக்கு மிகவும் பிடித்தமானது! இந்தியாவின் முதல் மல்டிவெர்ஸ் சூப்பர் ஹீரோ திரைப்படமான 'மல்டிவெர்ஸ் மன்மதன...