இந்தியா, மார்ச் 5 -- சோசியல் மீடியாவில் மிகவும் பிரபலமானவர் சவுக்கு சங்கர். சவுக்கு மீடியாவின் ஆசிரியராக இருக்கும் இவர் அதிலும், இன்ன பிற யூடியூப் தளங்களிலும் ஆளும் கட்சியை கடுமையாக விமர்சனம் செய்து வருகிறார்.

அண்மையில் இவர் தன்னுடைய யூடியூப் சேனலில் அமைச்சர் உதயநிதி தன்னுடைய ரசிகையாக நிவேதா பெத்துராஜிற்கு துபாயில் 50 கோடி ரூபாய்க்கு வீடு வாங்கி கொடுத்திருப்பதாக பேசினார். இவரது பேச்சு சமூகவலைதளங்களில் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், நிவேதா பெத்துராஜ் அதனை மறுத்து எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டு இருக்கிறார்.

அந்த பதிவில், " சமீபகாலமாக எனக்கு அதிகமாக பணம் செலவிடப்படுவதாக ஒரு தவறான செய்தி உலா வந்து கொண்டிருக்கிறது. நான் இது வரை அமைதியாக இருந்ததற்கான காரணம், இந்த விவகாரத்தை பற்றி பேசுபவர்கள், ஒரு பெண்ணின் வாழ்க்கையை கெடுக்கும் முன்னதாக...