இந்தியா, ஏப்ரல் 2 -- பிரபல சாமியார் நித்தியானந்தா, கர்நாடக மாநிலத்தில் ஆசிரமம் அமைத்தார். பின்னர் பல்வேறு இடங்களில் ஆசிரமங்களை நிறுவிய நித்தியானந்தா, நடிகையுடன் தனிமையில் இருந்ததாக வீடியோ வெளியானதால் சர்ச்சையில் சிக்கினார். மேலும் பெண் சீடர்களைத் தவறாக நடத்தியதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக பெங்களூரில் பாலியல் வழக்கு பதிவு செய்யப்பட்டதையடுத்து நித்தியானந்தா தலைமறைவாகினார்.

பாலியல் மற்றும் கடத்தல் வழக்குகளில் கர்நாடகா மற்றும் அகமதாபாத் போலீசாரால் தேடப்படும் சாமியார் நித்யானந்தா கடந்த சில வருடங்களுக்கு முன்பு வெளிநாடு தப்பி சென்றார். மேலும் கைலாசா என்ற தனித் தீவை உருவாக்கியிருப்பதாக அறிவித்த நித்தியானந்தா, அங்கு தொழில் தொடங்க வருமாறும் தமிழக மக்களுக்கு அழைப்பு விடுத்திருந்தார்.

மேலும் படிக்க : 'அணையை உடைக்க சதித்திட்டம்.. தமிழ்...