இந்தியா, ஜனவரி 9 -- Nithya Menen: குழந்தை நட்சத்திரமாக தமிழ் சினிமாவில் அறிமுகமான நடிகை நித்யா மேனன், தமிழ், மலையாளம் போன்ற தென்னிந்திய படங்களில் நடித்து, அவர் நடிப்பு ராட்சசி என்ற பெயரை பெற்றுள்ளார்.

இவரது நடிப்புத் திறமைக்கு அங்கீகாரம் கொடுக்கும் விதமாக மத்திய அரசு அவருக்கு தேசிய விருதும் அளித்தது. இந்நிலையில், நித்யா மேனன், ஜெயம் ரவி நடிப்பில் உருவான காதலிக்க நேரமில்லை திரைப்படம் பொங்கல் பண்டிகையை ஒட்டி வெளியாக உள்ளது. இந்தப் படத்தை கிருத்திகா உதயநிதி இயக்கி உள்ளார்.

இந்நிலையில், நடிகை நித்யா மேனன், பிஹைண்ட்வுட்ஸ் யூடியூப் சேனலுக்கு பேட்டி ஒன்று அளித்திருந்தார். அந்தப் பேட்டியில் அவர் பல விஷயங்கள் குறித்து பேசியுள்ளார். அந்தப் பேட்டியில், " தனக்கு அரசியல் பற்றி பெரிதாக எதுவும் தெரியாது. ஆனால், கிருத்திகா உதயநிதியை பார்த்தால் ஒரு அரசி...