இந்தியா, ஜனவரி 30 -- Nijjar Murder Row: காலிஸ்தான் பிரிவினைவாத தலைவர் ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொலையில் சில இந்திய ஏஜெண்டுகளுக்கு தொடர்பு இருப்பதாக கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ குற்றம் சாட்டியதற்கு முரணாக, நிஜ்ஜார் கொலையில் "வெளிநாட்டு அரசுடன்" "உறுதியான தொடர்பு" எதுவும் நிரூபிக்கப்படவில்லை என்று கனடா கமிஷன் அறிக்கை தெரிவித்துள்ளது.

'கூட்டாட்சி தேர்தல் செயல்முறைகள் மற்றும் ஜனநாயக நிறுவனங்களில் வெளிநாட்டு தலையீடு குறித்த பொது விசாரணை' என்ற பெயரில் செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்ட 123 பக்க அறிக்கையில் இத்தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதே அறிக்கை, கனடா தேர்தல்களில் இந்திய அரசாங்கம் தலையிடுவதாகவும் குற்றம் சாட்டியது, இந்தக் கூற்றை இந்தியா கடுமையாக மறுத்தது. இந்த அறிக்கைக்கு பதிலளித்த வெளியுறவு அமைச்சகம், "தலையீடு என்று கூறப்படும் நடவடிக்கைகள் குறித...