இந்தியா, ஜனவரி 9 -- தெலுங்கு சினிமாவின் இளம் ஹீரோயினாக இருப்பவர் நிதி அகர்வால். இவர் ஆந்திராவின் துணை முதலமைச்சர் மற்றும் பவர் ஸ்டார் பவன் கல்யாண் நடித்திருக்கும் ஹரி ஹர வீரமல்லு என்ற படத்தில் ஹீரோயினாக நடித்துள்ளார். சமூக வலைத்தளங்களில் சிலர் தன்னை மிரட்டுவதாகவும், கொலை செய்து விடுவேன் என அச்சுறுத்துவதாகவும் சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்துள்ளார்.

இதுதொடர்பாக நடிகை நிதி அகர்வால் அளித்துள்ள புகாரில், சமூக வலைத்தளங்கள் தொடர்ந்து தன்னை ஒருவர் மிரட்டி வருகிறார். அவர் தன்னையும், குடும்பத்தினரையும் குறிவைத்து தொடர்ந்து மிரட்டல் விடுக்கிறார். இதன் காரணமாக தான் மிகுந்த மனஅழுத்தத்தில் இருக்கிறேன். எனவே சம்மந்தப்பட்ட நபர் மீது சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகாரில் குறிப்பிட்டுள்ளார்.

இந்த புகாரின் பேரில் ஹைதராபாத் சைபர் கிரைம...