இந்தியா, ஜனவரி 28 -- ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாத அமைப்புக்கு ஆட்களை சேர்த்ததாக மயிலாடுதுறையைச் சேர்ந்த அல்பாசித் என்பவரை சென்னை என்.ஐ.ஏ அதிகாரிகள் கைது செய்து உள்ளனர்.

ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத அமைப்பு தொடர்பாக தமிழகத்தில் மயிலாடுதுறை, சென்னை உள்ளிட்ட பகுதிகளில் 16 இடங்களில் தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) அதிகாரிகள் சோதனை நடத்தினர். என்.ஐ.ஏ அதிகாரிகளுக்கு கிடைத்த தகவல்களின் அடிப்படையில் இன்று அதிகாலை முதல் சோதனைகள் நடந்தன. சந்தேகத்திற்கு உரிய நபர்களின் மறைவிடங்களில் நடத்தப்படும் இந்த சோதனையில், ஐ.எஸ்.ஐ.எஸ் சித்தாந்தத்தை ஊக்குவிப்பதற்கும் உறுப்பினர்களை ஆட்சேர்ப்பு செய்வதற்கும் தொடர்புடைய நபர்கள் தொடர்பான ஆதாரங்களை திரட்டுவதே என்.ஐ.ஏ அதிகாரிகளின் நோக்கம் என தகவல்கள் கூறுகின்றன.

ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாத அமைப்புக்கு ஆட்களை சேர்த்ததாக மயிலாடுதுறையைச் சேர்ந்த அல...