இந்தியா, பிப்ரவரி 1 -- பிரேசில் கால்பந்து அணியின் இந்த தலைமுறை நட்சத்திர வீரராக இருப்பவர் நெய்மார். இவர் சவுதி அரேபிய கால்பந்து லீக் தொடரான சவுதி புரொ லீக்கில் அல் ஹிலால் அணிக்காக விளையாடி வந்துள்ளார். இதையடுத்து பரஸ்பர ஒப்பந்தத்துடன் அந்த அணியில் இருந்து விலகிய ஏற்கனவே தான் விளையாடிய பிரேசிலை சேர்ந்த சாண்டோஸ் அணியில் மாறியுள்ளார்.

கடந்த 2023ஆம் ஆண்டில் 77.6 மில்லியன் பவுண்ட் என்கிற மிகப் பெரிய தொகையில் அல் ஹிலால் அணியினரால் ஒப்பந்தம் செய்யப்பட்டார். பல்வேறு உலக ஸ்டார் வீரர்கள் ஜொலித்து வரும் சவுதி லீக்கில் மின்னாத நட்சத்திரமாக திகழ்ந்தார் நெய்மார். காயத்தால் அடிக்கடி அவதிப்பட்டதால் நெய்மாரால் இந்த லீக்கில் தனது இருப்பை வெளிக்காட்ட முடியவில்லை என கூறப்படுகிறது. சவுதி புரொ லீக்கில் 7 ஆட்டங்களில் மட்டும் விளையாடியிருக்கும் நெய்மார் ஒர...