இந்தியா, மார்ச் 30 -- போளூர், செங்கம், கன்னியாகுமரி, கோத்தகிரி உள்ளிட்ட 7 புதிய நகராட்சிகளை உருவாக்கி அரசிதழ் வெளியிடப்பட்டு உள்ளது.

தமிழ்நாடு அரசு, புதிய நகர்ப்புற அமைப்புகளை உருவாக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக, போளூர், செங்கம், கன்னியாகுமரி, கோத்தகிரி, அவிநாசி, பெருந்துறை மற்றும் சங்ககிரி ஆகிய ஏழு பகுதிகளை புதிய நகராட்சிகளாக உருவாக்கி, அதற்கான அரசாணையை அரசிதழில் வெளியிட்டுள்ளது.

தமிழகத்தில் நகர்ப்புற அமைப்புகளின் எண்ணிக்கையை உயர்த்தும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இதன்படி, புதிய மாநகராட்சிகள், நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகள் உருவாக்கப்பட்டு வருகின்றன. இந்தப் பணிகள் நிறைவடையும் பொழுது, தமிழகத்தில் சுமார் 25 மாநகராட்சிகள், 146 நகராட்சிகள் மற்றும் 491 பேரூராட்சிகள் இருக்கும் என அமைச்சர் கே.என்.நேர...