இந்தியா, பிப்ரவரி 18 -- New FASTag Rules: ஃபாஸ்டேக்கிற்கான பல புதிய விதிகள் பிப்ரவரி 17, 2025 திங்கட்கிழமை முதல் நடைமுறைக்கு வந்தது. இவை டோல் பரிவர்த்தனைகளை ஒழுங்குபடுத்துவதற்கும் மோசடியைக் குறைப்பதற்கும் என்று நேஷனல் பேமென்ட் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா (NPCI) சுற்றறிக்கைகள் தெரிவிக்கின்றன. புதிய ஃபாஸ்டாக் விதிமுறைகள் தொடர்பாக நீங்கள் தெரிந்து கொள்ள 5 விஷயங்களைப் பார்ப்போம்.

1) பிளாக்லிஸ்ட்டில் உள்ள ஃபாஸ்டேக்குகள்: டோலை அடைந்தவுடன் ஃபாஸ்டேக் பிளாக்லிஸ்ட்டில் சேர்க்கப்பட்டால், டோல் கட்டணம் செயல்படுத்தப்படாது என்று புதிய விதிகள் கூறுகின்றன. ஸ்கேன் செய்வதற்கு குறைந்தது 10 நிமிடங்களுக்கு முன்பு ஃபாஸ்டேக் பிளாக்லிஸ்ட்டில் சேர்க்கப்பட்டிருந்தால் கட்டணம் நிராகரிக்கப்படும்.

2) கிரேஸ் பீரியட் : பயனர்கள் இப்போது சுங்கச்சாவடிகளைக் கடப்பதற்கு முன...