இந்தியா, ஏப்ரல் 4 -- நீட் தேர்வு பயத்தால் சத்யா என்ற மாணவி தற்கொலை செய்து கொண்ட நிலையில், இது குறித்து ஆய்வு செய்ய வேண்டும் என மத்திய அரசுக்கு அன்புமணி ராமதாஸ் கோரிக்கை விடுத்து உள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டு உள்ள அறிக்கையில், சேலம் மாவட்டம் எடப்பாடியை அடுத்த பெரிய முத்தையம்பட்டியைச் சேர்ந்த சத்யா என்ற மாணவி நீட் தேர்வில் அதிக மதிப்பெண் பெற முடியாது என்ற அச்சம் காரணமாக நஞ்சு குடித்து தற்கொலை செய்து கொண்டிருப்பது அதிர்ச்சியளிக்கிறது. மாணவி சத்யாவை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

மாணவி சத்யா ஏற்கனவே 12-ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்றதுடன், நீட் தேர்வையும் எழுதியுள்ளார். அதில் போதிய மதிப்பெண்கள் கிடைக்காத நிலையில் மீண்டும் நீட் தேர்வு எழுதுவதற்காக சேலம் ஜலகண்டாபுரத்தில் உள்ள...