இந்தியா, பிப்ரவரி 5 -- இன்றைய காலகட்டத்தில் நாம் பெரும்பாலானோர் அமர்ந்துகொண்டே வேலை செய்கிறோம். பெரும்பாலும் கம்ப்யூட்டர் முன்னே அமர்ந்துகொண்டு செய்யும் வேலைதான் நமது வேலை. இதனால் கழுத்து வலி, கழுத்து எலும்புகளில் தேய்மானம் என பல்வேறு உடல் உபாதைகள் ஏற்படுகின்றன. அதைத்தடுக்க நாம் என்ன செய்ய வேண்டும் என்று பாருங்கள்.

இதுகுறித்து திருச்சியைச் சேர்ந்த பாரம்பரிய இயற்கை மருத்துவர் ராசா ஈசன் கூறுவது என்ன?

கழுத்து எலும்பில் தேய்மானம் உருவாவதற்கு முக்கிய காரணம், கழுத்துக்கு நாம் கொடுக்கும் அதிகப்படியான அழுத்தம் ஆகும்.

மொபைல் பயன்பாடு, கணினி பயன்பாடு, வாகனம் ஓட்டுதல் போன்ற சமயங்களில் கழுத்தை எந்தவிதமான ஒரு சாய்மானமோ பிடிமானமோ இல்லாமல் இறுக்கமாக வைத்து பழகுகிறோம். இது கழுத்து எலும்புகளில் பெரும்பளவு அழுத்தத்தை ஏற்படுத்துகிறது. இறுக்கமாக வெகு நேரம...