இந்தியா, மார்ச் 4 -- Nayanthara: ''தன்னை லேடி சூப்பர் ஸ்டார் என அழைக்க வேண்டாம்" என நடிகை நயன்தாரா வேண்டுகோள் விடுத்துள்ளார்.

மேலும், பட்டங்களும் விருதுகளும் மதிப்புமிக்கவை தான் என்றும்; ஆனால், சில சமயங்களில் அவை நம்மை வேலையில் இருந்தும், கலைத்தொழிலில் இருந்தும், உங்கள் அன்பான தொடர்பில் இருந்தும் பிரிக்கக் கூடும் என்பதால் அவ்வாறு அழைக்க வேண்டாம் என கேட்டுக்கொள்கிறேன் எனவும் நடிகை நயன் தாரா கூறியிருக்கிறார்.

இதுதொடர்பாக நடிகை நயன்தாரா வெளியிட்ட அறிக்கையில், ''என் அன்பு ரசிகர்கள், மதிப்பிற்குரிய ஊடக நண்பர்கள் மற்றும் திரைப்படக் குடும்பத்தினருக்கு வணக்கம்.

நான் ஒரு நடிகையாகப் பயணித்துவரும் இந்தப் பாதையில் மகிழ்ச்சி மற்றும் வெற்றியின் அனைத்து ஆதாரங்களுக்கும் மனமார்ந்த நன்றியைத் தெரிவிக்கிறேன். இந்தக் கடிதம் நீங்களும் உங்கள் குடும்பத்தினரும...