இந்தியா, பிப்ரவரி 3 -- மாதவன், நயன்தாரா, சித்தார்த், மீரா ஜாஸ்மின் பிரதான கதாபாத்திரங்களில் நடிக்க ஸ்போர்ட்ஸ் ட்ராமா பாணியில் உருவாகியிருக்கும் டெஸ்ட் படத்தின் டீஸரை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாக இருக்கும் இந்த படத்தின் ரிலீஸ் தேதி குறித்து எந்த அறிவிப்பும் வெளியிடவில்லை.

டெஸ்ட் கிரிக்கெட் விளையாட்டை மையப்படுத்திய கதையம்சத்தில் டெஸ்ட் படம் உருவாகியுள்ளது. டீஸர் காட்சியில் சித்தார்த் கிரிக்கெட் வீரராக நடித்துள்ளார். மாதவன், நயன்தாரா, மீரா ஜாஸ்மின் கதாபாத்திரங்கள் புதிராக அமைந்துள்ளது. ஓய் நாட் ஸ்டுடியோஸ் நிறுவனம் சார்பில் தமிழ்ப்படம், வா குவாட்டர் கட்டிங், காவியத்தலைவன் போன்ற படங்களை தயாரித்த சசி காந்த் இந்த படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார். காதல், கனவு, ஆசை, தேர்வு மற்றும் கிரிக்கெட் ஆகியவற்ற...