இந்தியா, மார்ச் 22 -- "மக்கள்தொகையைக் கட்டுப்படுத்திய மாநிலங்கள் தண்டிக்கப்படக்கூடாது" என ஒடிசா முன்னாள் முதலமைச்சர் நவீன் பட்நாயக் தெரிவித்து உள்ளார்.

தொகுதி மறுசீரமைப்பு தொடர்பான கூட்டம் சென்னை கிண்டியில் உள்ள ஐடிசி சோழா ஓட்டலில் தொடங்கி உள்ளது. இக்கூட்டத்தில் கேரள முதல்வர் பினராயி விஜயன், தெலங்கானா முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி, கர்நாடக துணை முதலமைச்சர் டி.கே.சிவக்குமார் மற்றும் 15 கட்சிகளை சேர்ந்த 25க்கும் மேற்பட்ட தலைவர்கள் இதில் பங்கேற்று உள்ளனர்.

மக்கள்தொகை கட்டுப்பாடு என்ற தேசிய அஜெண்டா, மாநிலங்களின் தலையீடுகளாக பரவலாக்கப்பட்டது. பல ஆண்டுகளாக மத்திய அரசு இதற்கு உயர் முன்னுரிமை அளித்தது. மாநிலங்களும் தங்கள் சொந்த முயற்சிகளை மேற்கொண்டு, தேசிய அஜெண்டாவை வெற்றிகரமாக செயல்படுத்துவதில் இணைந்தன. கேரளம், ஆந்திரப் பிரதேசம், தெலங்கானா, கர்நா...