இந்தியா, பிப்ரவரி 4 -- 38வது தேசிய விளையாட்டுப் போட்டிகளில் ஆண்களுக்கான 10 மீட்டர் பிஸ்டல் பிரிவில் ஒலிம்பியன்களை விஞ்சி தங்கப் பதக்கம் வென்ற 15 வயது துப்பாக்கி சுடும் வீரர் ஜோனாதன் அந்தோணி, அனைவரின் கவனத்தையும் ஈரத்துள்ளார்.

கர்நாடகா மாநிலத்தை சேர்ந்த அந்தோணி தனது முதல் சீனியர் தேசிய தங்கப் பதக்கத்தை 240.7 புள்ளிகளுடன் வென்றுள்ளார். சர்வீசஸை சேர்ந்த ரவீந்தர் சிங் (240.3) மற்றும் குர்பிரீத் சிங் (220.1) ஆகியோரை முந்தியுள்ளார்.

இறுதிப் போட்டியில் பாரிஸ் ஒலிம்பிக் 2024 வெண்கலப் பதக்கம் வென்ற சரப்ஜோத் சிங் இறுதிப்போட்டியில் இடம்பிடித்தார். ஆனால் அவர் 198.4 புள்ளிகளுடன் நான்காவது இடத்தைப் பிடித்தார். இதற்கிடையே 10 மீட்டர் ஏர் பிஸ்டல் போட்டியில் இளைய தேசிய விளையாட்டு சாம்பியன் என்ற பெருமைய பெற்றுள்ளார் அந்தோணி

"இந்த வெற்றியால் நான் மிகுந்த ...