இந்தியா, பிப்ரவரி 2 -- நாசர் தம்பியான ஜவஹர் தன்னுடைய தோல்வியடைந்த கல்யாண வாழ்க்கை குறித்து பேசி இருக்கிறார்.

இது குறித்து ஆதன் தமிழ் சேனலுக்கு அவர் பேசும் போது, 'நான் பிரான்சிற்க்கு சென்று நன்றாக சம்பாதித்தேன். இந்த நிலையில்தான் என்னுடைய அம்மா, வயதான காலத்தில் உனக்கு நிச்சயம் ஒரு துணை இருக்க வேண்டும். அதனால் நீ கல்யாணம் செய்து கொள் என்றார். இதையடுத்து நான் கல்யாணம் செய்து கொள்ள சம்மதித்தேன்.

பெண் ஐடித்துறையில் வேலை பார்த்துக் கொண்டிருந்தார். அவர், நான் வசதியானவன் என்றும் நாசரின் தம்பி என்பதற்காகவும் என்னை கல்யாணம் செய்து கொண்டார். கல்யாணமான 15 நாட்களிலேயே அவர் கர்ப்பம் தரித்து விட்டார். அவருக்கு பிள்ளை பெற்றுக்கொள்ள விருப்பமில்லை என்றாலும், அவரது பெற்றோர் கொடுத்த அழுத்தத்தின் காரணமாக அவர் ஒத்துக்கொண்டார்.

கல்யாணம் முடிந்த சில காலமாகவே ...