இந்தியா, ஏப்ரல் 14 -- அதிமுக-பாஜக கூட்டணி பலவீனமானது என பேசிய ஆ.ராசா ஜோதிடரா என பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் கேள்வி எழுப்பி உள்ளார்.

திருநெல்வேலியில் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்த பின் பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர்,

அம்பேத்கர் பிறந்தநாளை "எனது வாழ்நாளில் ஒரு ராசியான நாள்" என வர்ணித்த நைனார், 2001 ஆம் ஆண்டு அதே நாளில் திருநெல்வேலியில் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்த நாளில் அதிமுக வேட்பாளராக அறிவிக்கப்பட்டதை நினைவுகூர்ந்தார். "இன்று, 20 ஆண்டுகளுக்கு பிறகு, பிரதமர் மோடி, அமித்ஷா ஆகியோரால் மாநில தலைவராக நியமிக்கப்பட்டு, மீண்டும் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவிக்கும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது" என்று உணர்ச்சிபூர்வமாக தெரிவித்தார்.

பொன்முடி விவகாரம் குறித்து எழுப்பப்பட்...