இந்தியா, மே 24 -- விக்ரம் கே குமார் நடிப்பில் கடந்த 2014-ம் ஆண்டு வெளியாகி சூப்பர் ஹிட்டான 'மனம்' திரைப்படம், மீண்டும் திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.

ஹைதராபாத்தில் இருக்கும் தேவி 70 எம்.எம் திரையரங்கில் காட்சிப்படுத்தப்பட்ட மனம் திரைப்படத்தின் சிறப்பு காட்சியில் நாக சைதன்யா கலந்து கொண்டார். இது தொடர்பான வீடியோ சமூகவலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.

அந்த வீடியோவில் தியேட்டருக்குள் நுழையும் நாகசைதன்யாவின் மீது ரசிகர்கள் பூக்கள் தூவி வரவேற்கின்றனர். தொடர்ந்து அவர் இயக்குநர் விக்ரம் குமாருடன் அமர்ந்து படத்தை பார்க்கின்றார். இருப்பினும், தொடர்ந்து பின்னால் வந்த ரசிகர்கள், இருக்கையில் அமர்ந்திருந்த நாக சைதன்யாவின் மீது, பூக்களைத் தூவுகின்றனர். படத்தை வெகுவாக ரசித்த ரசிகர்கள் டிக்கெட்டுகளை தூவி ஆரவாரம் செய்தனர்.

குறிப்பாக சொல்லவேண்டுமென்றால்,...