இந்தியா, ஜனவரி 26 -- Mysskin speech: பா.ரஞ்சித் தயாரிப்பில் சோம சுந்தரம் கதாநாயகனாக நடித்து வெளியான 'பாட்டில் ராதா' திரைப்பட ஆடியோ வெளியீட்டு விழாவில், இயக்குநர் மிஷ்கின் வரம்பு மீறி பேசி இருந்தார். இதற்கு திரைத்துறை வட்டாரத்தில் மிகப்பெரிய எதிர்ப்பு எழுந்தது. இந்த நிலையில் இன்று நடந்த பேட் கேர்ள் பட நிகழ்வில் அதற்காக அவர் மன்னிப்புக்கோரி இருக்கிறார்.

அதில் அவர் பேசும் போது, ' முதலாவதாக நான் மன்னிப்பு கேட்க நினைப்பது பாடல் ஆசிரியர் தாமரையிடம்... அவர் என்னை விமர்சித்து பேசி இருந்தார். அப்போது அவர் ஒரு விஷயத்தை குறிப்பிட்டு இருந்தார். அதில், வெற்றி என்னை அப்படி பேச வைத்திருக்கிறது என்று இருந்தது.

18 வருடங்களாக நான் போராடிக் கொண்டே இருக்கிறேன் தாமரை சகோதரி அவர்களே... தினமும் ஒரு 10 நிமிடம் உன் மரணத்தை பற்றி தியானி என்று பௌத்தம் சொல்வது போல...