இந்தியா, ஜனவரி 26 -- Mysskin apology: பா.ரஞ்சித் தயாரிப்பில் சோம சுந்தரம் கதாநாயகனாக நடித்து வெளியான 'பாட்டில் ராதா' திரைப்பட ஆடியோ வெளியீட்டு விழாவில், இயக்குநர் மிஷ்கின் வரம்பு மீறி பேசி இருந்தார். இதற்கு திரைத்துறை வட்டாரத்தில் மிகப்பெரிய எதிர்ப்பு எழுந்தது. இந்த நிலையில் இன்று நடந்த 'பேட் கேர்ள்' பட நிகழ்வில் அதற்காக அவர் மன்னிப்புக்கோரி இருக்கிறார். அதில் அவர் 'பிசாசு 2' திரைப்படம் முடங்கி கிடப்பதற்கான காரணம் குறித்தும் பேசினார்.

அவர் பேசும் போது, 'கடந்த மூன்று நாட்களாக எல்லா தொலைக்காட்சிகளிலும் நான்தான் இருந்தேன். என்னுடைய திரைப்படங்கள் நல்ல திரைப்படங்கள் இல்லையா..? என்னுடைய படங்களில் சமூக கருத்தை நான் முன் வைக்கவில்லையா..? என்னுடைய திரைப்படங்கள் பேரன்பு இல்லையா.. ? நான் பெரிய ஹீரோவிடம் கதைகளைச் சொல்லி பெரிய இயக்குநராக வேண்டும் என்...