இந்தியா, பிப்ரவரி 2 -- நம்மில் பலருக்கு சிக்கன் சமைப்பது என்றால் மிகவும் எளிதான காரியமாக இருக்கலாம். ஆனால் அது மட்டன் என வரும் போது நாம் சற்று தடுமாறவும் செய்வோம். ஏனென்றால் மட்டனை வேக வைக்கும் போது சரியான பதம் தெரிய வேண்டும். இல்லையென்றால் அது சரியாக வேகாது அல்லது அதிகமாக வெந்து தடிமனாகி விடும். இது போன்ற பிரச்சனைகளை தவிர்க்க முன்னதாகவே மட்டன் சமைக்கத் தெரிந்தவர்களிடம் கேட்டு சமைக்கலாம். அப்படி கேட்பதற்கு யாரும் இல்லையா? இதோ அசத்தலான மட்டன் சூப் செய்வது எப்படி என்பதை இங்கே கொடுத்துள்ளோம். இதனை முழுமையாக படித்து பார்த்து உங்கள் வீட்டில் சூப் செய்து கொடுத்து அசத்துங்கள்.

கால் கிலோ மட்டன்

ஒரு பெரிய வெங்காயம்

ஒரு பெரிய தக்காளி

4 பச்சை மிளகாய்

2 டீஸ்பூன் இஞ்சி- பூண்டு விழுது

ஒரு தேக்கரண்டி மிளகு தூள்

1 டீஸ்பூன் சீரக தூள்

அரை டீஸ்பூன் ...