இந்தியா, பிப்ரவரி 12 -- அசைவ பிரியர்கள் சிறந்த விருந்தாக மட்டன் சமையல் அமைந்திருக்கும். ஏனென்றால் மட்டன் சமையலில் தான் ரத்தம் முதல் தலை வரை கிடா உடலின் அனைத்து பாகங்களும் உணவாக தயார் செய்து ருசிக்கலாம். அந்த வகையில் மட்டனில்தொடை கறி, குடல் கறி, தலைகறி என ஒவ்வொருவருக்கும் பல்வேறு பாகங்கள் பிடித்திருக்கும்.

அந்த வகையில் மட்டன் ஈரல் பலருக்கு பிடித்தமான உணவாக இருந்து வருகிறது. மட்டன் ஈரலில் கிரேவி குழந்தைகள், பெரியவர்கள் என அனைவரும் விரும்பி சாப்பிடக்கூடியதாக இருந்து வருகிறது. அதன்படி தெலுங்கு ஸ்டைலில் மட்டன் ஈரல் குழம்பு செய்வது எப்படி என்பதை பார்க்கலாம்.

இந்த மட்டன் ஈரல் குழம்பானது சாதத்துடன் மட்டுமல்லாமல், இட்லி, தோசை, சப்பாத்தி போன்ற டிபன் ஐட்டம்களுக்கும் சிறந்த தொடுகறியாகவே அமைந்திருக்கும். வீட்டில் வைத்து சுடச்சுட சுவையான மட்டன் ஈர...