இந்தியா, பிப்ரவரி 21 -- நவீன உலகம் வரத் தொடங்கிய பின்னர் மக்கள் தங்களது வேர்களை மறக்க ஆரம்பித்து விடுகிறார்கள். தொழில்நுட்ப முன்னேற்றம் வளர்ச்சி பாதையில் இருந்தால் அது சீரானதாக இருக்கும். ஆனால் நம்மை சோம்பேறியாக்கும் வளர்ச்சியாக இது இருந்து வருகிறது. சமைப்பது என்பது ஒரு கலை ஆகும். இது ஆண், பெண் என எந்த வேறுபாடும் இல்லாமல் சாப்பிடும் அனைவரும் தெரிந்து வைத்திருக்க வேண்டிய திறன் ஆகும். ஆனால் நகர வாழ்க்கையில் வளர்ந்த தொழில்நுட்பம் காரணமாக நமது வீட்டினை தேடி சாப்பாடு வருகிறது. ஆனால் இது வசதியாக இருந்தாலும் காலப்போக்கில் நம்மை சமையல் தெரியாத சோம்பேறிகளாக மாற்றிவிட்டது. சமையல் தெரியாதவர்கள் சமைக்க கற்றுக் கொள்ள வேண்டும். அனைவருக்கும் பிடித்தமான ஒரு உணவு என்றால் அது பிரியாணி தான். ஆனால் இனி பிரியாணிக்காக பூட் டெலிவிரி ஆப்களை எதிறப்பார்க்க வேண்டாம...