இந்தியா, பிப்ரவரி 6 -- குழந்தை கருவில் வளரும் போதே வெளியே நாம் பேசுவது குழந்தைக்கு கேட்கும் எனவும், அதற்கு அனைத்தும் நினைவில் இருக்கும் எனவும் கூறப்பட்டு வருகிறது. மகாபாரதம் போன்ற புராணங்களில் கூட இது குறித்து கதை ஒன்று கூறப்பட்டிருக்கும். அர்ஜூனின் மகன் அபிமன்யுவிற்கு சக்கர வியூகத்திற்குள் நுழைவதற்கான வழி இவ்வாறே தெரிந்தது என்பது தான் அந்த கதை. ஆனால் தற்போது கர்ப்பமாக இருக்கும் போது கேட்கும் இசை கருவின் இதயத்துடிப்பில் மாற்றங்களை ஏற்படுத்துவதாக ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது.

இசை நீண்ட காலமாக மனிதகுலத்திற்கு ஆறுதலை அளித்து வருகிறது. தற்போது அந்த இசை பிறக்காத குழந்தைக்கும் மாறுதலை வழங்குகிறது. இந்தக் கருத்து தலைமுறை தலைமுறையாக பிரபலமாக இருந்து வந்தாலும், பிறக்காத குழந்தையின் மீது இசையின் உண்மையான உடலியல் விளைவுகளை அறிவியல் இப்போது கண்டுபி...