இந்தியா, பிப்ரவரி 5 -- ரஜினிகாந்துடன் 'பாட்ஷா' திரைப்படத்தில் பணியாற்றிய அனுபவம் குறித்து இசையமைப்பாளர் தேவா கலாட்டா யூடியூப் சேனலுக்கு அண்மையில் கொடுத்த பேட்டியில் பேசி இருக்கிறார்.

இது குறித்து அவர் பேசும் போது, 'ரஜினிகாந்தும் நானும் 'அண்ணாமலை' திரைப்படத்தில் இணைந்தோம். அந்த படம் மிகப்பெரிய ஹிட் ஆனது. அந்தப் படத்தில் இடம்பெற்ற பாடல்களும் மிகப்பெரிய அளவில் பேசப்பட்டது.

இந்த நிலையில், மீண்டும் நாங்கள் 'பாட்ஷா' திரைப்படத்தில் இணைந்தோம். 'அண்ணாமலை' போல 'பாட்ஷா' படத்திற்கும் மிகவும் வெறித்தனமாக இசையமைத்தேன். அந்தப் படத்தின் பொழுது பின்னணி இசை அமைப்பதற்கு முன்பாக எல்லோரும் படத்தை பார்த்தோம்.

படத்தைப் பார்த்து முடித்த பின்னர் ரஜினி சார் எனக்கு போன் செய்தார். அவர் என்னிடம் சார். நேற்று நாம் படம் பார்த்தோம். படத்தில் எனக்கு நிறைய குழப்பங்கள் ...