இந்தியா, ஜனவரி 31 -- Mushroom Fry : காளானில் நமது ஆரோக்கியத்திற்கு நல்ல பல சத்துக்கள் உள்ளன. வாரம் ஒருமுறையாவது காளானில் விதவிதமான உணவுகளை சாப்பிடுவது நல்லது. காளான் பிரியாணி, காளான் கறி, காளான் கூட்டு, காளான் வறுவல் என காளானில் என்ன செய்தாலும் சுவையாக இருக்கும். இங்கு காளான் வறுவல் செய்முறையை கொடுத்துள்ளோம். இது சாதத்துடன் மட்டுமின்றி சப்பாத்தியுடன் கூட சுவையாக இருக்கும். இந்த செய்முறையை எப்படி செய்வது என்று தெரிந்து கொள்ளுங்கள்.

1. காளான் ப்ரை அல்லது வறுவல் சமைப்பதற்கு முன், காளானை நன்கு கழுவவும்.

2. இதற்கு ஒரு பாத்திரத்தில் காளான் சேர்த்து தண்ணீர் ஊற்றி உப்பு சேர்த்து அடுப்பை சிம்மில் வைத்து கொதிக்கவிடவும்.

3. நன்கு கொதித்ததும் அடுப்பை அணைக்கவும். கொதிக்கும் நீரில் மஞ்சள்தூள் சேர்த்து இரண்டு நிமிடம் வைக்கவும்.

4. பின்னர் அவற்றை கைய...