இந்தியா, ஜனவரி 12 -- உங்கள் உணவில் அதிகளவில் நீங்கள் முருங்கைக்கீரையை ஏன் சேர்த்துக்கொள்ளவேண்டும் என்று பாருங்கள். அதை ஏன் சூப்பர் ஃபுட் பட்டியலில் வைத்துள்ளார்கள் என்று தெரிந்துகொள்ளங்கள். முருங்கைக்கீரையின் நன்மைகள் என்னவென்று பாருங்கள். இதில் ஊட்டச்சத்துக்கள் அடர்த்தியாக உள்ளது. இந்த சூப்பர் ஃபுட்டில் வைட்டமின்கள், மினரல்கள், ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் மற்றும் வீக்கத்துக்கு எதிரான குணங்கள் உள்ளது. அதன் இலைகள் உங்கள் ஆரோக்கியத்துக்கு இயற்கை கொடுத்த வரம் என்றே கூறலாம். இது உங்கள் உடல் முழுமைக்கும் நன்மை கொடுக்கிறது. இது உங்கள் உடலில் நோய் எதிர்ப்பாற்றலை அதிகரிக்கிறது. செரிமான ஆரோக்கியத்துக்கு உதவுகிறது. இதயத்துக்கு இதமளிக்கிறது. மூளையின் நடவடிக்கைகளை மேம்படுத்துகிறது.

முருங்கைக்கீரையில் குயிர்சிட்டின் மற்றும் குளோரோஜெனிக் ஆசிட் என்ற ஆன்டி ஆக்ஸ...