இந்தியா, பிப்ரவரி 14 -- உறவுகள் வலுவாக வேண்டுமென்றால் அதற்கு நெருக்கம் மிகவும் அவசியம். நெருக்கம்தான் உறவின் இதயம் போன்றது. இது உடலைக் கடந்து, உணர்வு, மனம் மற்றும் தெய்வீகமானதாக இருக்கவேண்டும். சமூகம் மற்றும் தனிப்பட்ட உறவுகள் குறித்த ஆய்விதழ் இதைக் கூறுகிறது. நீங்கள் உங்கள் பார்ட்னருடன் நெருக்கமாக இருக்கும்போது, இருவருக்கும் பாதுகாப்பான இடத்தை உருவாக்குகிறீர்கள். இந்த ஆழ்ந்த பிணைப்பு நம்பிக்கை, புரிதல், பரஸ்பர மரியாதை ஆகியவற்றை வளர்த்தெடுக்கிறது. இது இருவருக்கும் மதிப்பு மற்றும் ஆதரவு இரண்டையும் கொடுக்கிறது. நெருக்கம் உரையாடலை வலுப்படுத்துகிறது. உங்களின் ஆசைகள், எல்லைகள், கடுமையான விஷயங்களைக் கூட உங்களை பேச அனுமதிக்கிறது. வாழ்வில் முடிவுகள் எடுக்கவும் அனுமதிக்கிறது. நெருக்கம் இருவரையும் சேர்ந்து வளர அனுமதிக்கிறது. இருவரும் இணைந்திருப்பதை...