இந்தியா, பிப்ரவரி 15 -- குழந்தைகள் மனதில் நேர்மறை சிந்தனைகளை விதைக்க வேண்டுமெனில் அவர்கள் காலையில் செய்ய வேண்டிய விஷயங்கள் என்னவென்று பாருங்கள். காலையில் எழுந்தவுடன் நேர்மறையான பழக்கங்கள் குழந்தைகளிடம் தன்னம்பிக்கை அதிகரிக்க உதவும். அவர்களின் கவனம் மேம்படும். அவர்களின் மீண்டெழும் குணமும் உயரும். அவர்கள் காலையில் எழுந்தவுடன் சில விஷயங்களை செய்யும்போது அவர்களுக்கு ஒரு நேர்மறை மனநிலை உருவாகிறது. இது அவர்களுக்கு வெற்றியைத் தருகிறது.

உங்கள் குழந்தைகள் நன்றியை வெளிப்படுத்த கற்றுக்கொடுங்கள். அவர்கள் ஏதாவது ஒரு விஷயத்துக்கு நன்றி தெரிவிக்கவேண்டும். ஒவ்வொரு காலையிலும் உங்கள் குழந்தைகள் பாராட்டு மற்றும் நேர்மறை எண்ணங்களை வளர்தெடுக்கவேண்டும்.

ஊட்டச்சத்துக்கள் நிறைந்த காலை உணவு உங்கள் குழந்தைகளின் உடல் மற்றும் மூளைக்கு சுறுசுறுப்பைக் கொடுக்கிறது. க...