இந்தியா, ஜனவரி 31 -- காலை நேரத்தில் இந்தப்பழக்கங்களை நீங்கள் பழகும்போது, அது உங்கள் உடலுக்கு புது உற்சாகத்தைக் கொடுக்கும் என்று கூறப்படுகிறது. காலையில் நாம் உறங்கி எழுவது மிகவும் சவாலான ஒன்றாகும். இரவில் அதிக நேரம் விழித்திருந்தால் காலையில் விழிப்பு என்பதே வராது. மிகவும் கடினமாக இருக்கும். அதிகாலையில் கண் விழிப்பதுதான் உங்கள் நாளை சுறுசுறுப்பாக்கும் என்று கூறப்படுகிறது. இதை நீங்கள் தொடர்ந்து செய்யும்போது தெரியவரும். நீங்கள் அதிகாலையில் எழுந்துவிட்டால், உங்களுக்கு நிம்மதியாக சாப்பிட நேரம் இருக்கும். உங்களின் நாளையும் திட்டமிடலாம். சில எளிய விஷயங்கள், உங்களை நாள் முழுமையையும் சுறுசுறுப்பாக்கும். நீங்கள் சில காலை பழக்கங்களை கை கொள்ளும்போது, உங்களுக்கு மனஅழுத்தம் குறையும். உங்களின் உற்பத்தித்திறன் அதிகரிக்கும். உங்களின் அன்றாட வாழ்க்கை சிறப்ப...