இந்தியா, பிப்ரவரி 15 -- காலையில் எழுந்ததும் சத்தான உணவை உண்ண வேண்டும் என பல உணவு நிபுணர்கள் பரிந்துரை செய்கின்றனர். ஆனால் நாம் இப்போதும் வழக்கமான இட்லி, தோசை, பொங்கல் என நமது அன்றாட உணவுகளையே சாப்பிட்டு வருகிறோம். ஆனால் இந்த உணவுகள் மட்டும் நமது உடலின் ஆரோக்கியத்திற்கு போதாது. இந்த உணவுகளை தாண்டி அதிக புரதச்சத்துக்கள், வைட்டமின்கள் மற்றும் பல ஊட்டச்சத்துக்கள் நிறைந்த உணவுகளை நமது காலை உணவாக எடுத்துக் கொள்ள வேண்டும். ஏனெனில் காலை உணவே நமது நாளை தொடங்குவதற்கு நமக்கான உடல் பலத்தை வழங்குகிறது. நமது உடலின் ஆற்றல் சீராக இருக்க காலை உணவு சத்தானதாக இருக்க வேண்டும். நீங்கள் வழக்கமாக சாப்பிடும் தோசையவே சிறப்பான ஆற்றலை வழங்கும் உணவாக மாற்றலாம். அதற்கு எளிமையான ஒரு உணவு தான் பாசிப்பயிறு. பாசிப்பயறில் அதிக புரத சத்து உள்ளது. மேலும் இது நமக்கு சிறந்த ஆ...