இந்தியா, பிப்ரவரி 14 -- Money: மனித வாழ்க்கையில் திருமண உறவு என்பது மிகவும் இன்றி அமையாத ஒன்றாக கருதப்படுகிறது. அனைவரின் வாழ்க்கையிலும் மிகவும் முக்கியமான உறவாக திருமண உறவு கருதப்படுகிறது. பல காரணங்களை மையப்படுத்தி திருமண பந்தத்தில் ஒவ்வொருவரும் இணைக்கின்றனர்.

ஒரு சிலர் காதலுக்காக திருமணம் செய்து கொள்வார்கள். ஒரு சிலர் மகிழ்ச்சிக்காக திருமணம் செய்து கொள்வார்கள். ஒரு சிலர் பாதுகாப்பு வேண்டி திருமணம் செய்து கொள்வார்கள். ஆனால் ஒரு சிலர் குறிப்பாக நிதியை குறிவைத்து அதன் பாதுகாப்புக்காக திருமணம் செய்து கொள்வார்கள்.

ஜோதிட சாஸ்திரத்தின் படி சில ராசிகளில் பிறந்தவர்கள் மற்றவைகளோடு ஒப்பிடும்போது பணத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பார்கள். அந்த பணத்தின் மீது இருக்கக்கூடிய முக்கியத்துவம் திருமண உறவிலும் அவர்களுக்கு தொடர்ந்து வரும். ஆடம்பர வாழ்க்க...