இந்தியா, ஜனவரி 31 -- பிரயாக்ராஜ் மகாகும்பமேளாவின் போது இணையத்தில் புயலைக் கிளப்பிய மத்திய பிரதேசத்தின் கார்கோன் மாவட்டத்தைச் சேர்ந்த 16 வயதான சிறுமி மோனாலிசா போஸ்லே மீண்டும் தலைப்புச் செய்திகளில் இடம்பிடித்துள்ளார்.

ஆம், தன்னுடைய அற்புதமான கண்கள் மூலம் மகாகும்பமேளாவில் கவனம் பெற்றவர் மோனாலிசா. இவரை தன்னுடைய 'தி டைரி ஆஃப் மணிப்பூர்' படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் கமிட் செய்திருக்கிறார் அந்தப்படத்தின் இயக்குநர் சனோஜ் மிஸ்ரா.

இது தொடர்பாக அவர் மோனாலிசா மற்றும் அவரது குடும்பத்தை சந்தித்து பேசி இருக்கிறார். இது தொடர்பான வீடியோவையும் அவர் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து இருக்கிறார். முன்னதாக, சனோஜ் மிஸ்ரா இயக்கத்தில் வெளியான 'தி டைரி ஆஃப் வெஸ்ட் ஃபெங்கால்' படம் பரவலான கவனம் ஈர்த்திருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்த வாய்ப்பின்...