இந்தியா, மார்ச் 19 -- Mohanlal: மலையாள நடிகரான மோகன்லால் தன்னுடைய நண்பரும், நடிகருமான மம்முட்டி நலம் பெறுவதற்காக சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு சென்று பிரார்த்தனை செய்திருக்கிறார். அண்மையில், மம்முட்டிக்கு புற்றுநோய் பாதிப்பு ஏற்பட்டு இருப்பதாக தகவல் வெளியானது. ஆனால், அவரது மக்கள் தொடர்பு குழு, அது உண்மைக்கு புறம்பான செய்தி என்று தெரிவித்திருந்தது.

மேலும் படிக்க | மோகன்லால்: எம்புரான் படத்தில் இணைந்த கேம் ஆப் த்ரோன்ஸ்! - விபரம் உள்ளே!

இந்த நிலையில் நேற்றைய தினம் நடிகர் மோகன்லால் சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு சென்றார். நீல கலர் டீசர்ட் மற்றும் கருப்பு தோத்தி உடுத்திச்சென்ற அவருக்கு கோயில் நிர்வாகம் சார்பில் பெரும் வரவேற்பு அளிக்கப்பட்டது. தொடர்ந்து அவர் சாமி தரிசனம் செய்தார்.

அங்கு அவர் தன்னுடைய நண்பரும், நடிகருமான மம்முட்டியின் பிறப்பு பெயரான...