இந்தியா, ஜனவரி 27 -- இயக்குநர் வெற்றி மாறனின் கிராஸ் ரூட் பிலிம் கம்பெனி நிறுவனம் தயாரிப்பில் உருவாகி இருக்கும் திரைப்படம் 'பேட் கேர்ள்'. வெற்றிமாறனின் உதவி இயக்குநரான வர்ஷா இந்தப்படத்தை இயக்கி இருக்கிறார்.

இந்தப்படத்தின் டீசர் அண்மையில் வெளியாகி கவனத்தை ஈர்த்து இருக்கிறது. அஞ்சலி சிவராமன் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ள இந்தப்படத்தில், சாந்தி பிரியா, சரண்யா ரவிச்சந்திரன், ஹ்ரிது ஹரூன், டீஜே உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.

இந்தப்படத்தை அண்மையில் பார்த்த இயக்குநர் பா.ரஞ்சித் தனது எக்ஸ் தளத்தில், 'பேட் கேர்ள் திரைப்படத்தைப் பார்த்தேன். உண்மையில் மிகவும் துணிச்சலான, புத்துணர்ச்சியான திரைப்படம். இம்மாதிரியான கதையை படமாக்கியதற்காகவே, வெற்றிமாறன் அதிகமான பாராட்டிற்கு தகுதியானவர். இந்தத்திரைப்படம் சமூகத்தில் பெண்கள் சந்திக்கும்...